இன்பநிதியும் முதலமைச்சராக வரவேண்டும்; முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

தமிழக முதலமைச்சராக உதயநிதிஸ்டாலின் மகன் இன்பநிதி வர வேண்டும் என கடலூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 17, 2022, 09:15 AM IST
  • முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தல்
  • இன்பநிதி முதலமைச்சராக வர வேண்டும்
  • திமுகவினர் விரும்புவதாக பேச்சு
இன்பநிதியும் முதலமைச்சராக வரவேண்டும்; முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தல் title=

கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் மாநகரம் சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் கடலூர் புதுப்பாளையம் கடைவீதியில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை எப்போதும் திமுக அரசைக குறைகூறிக் கொண்டே இருப்பதாக தெரிவித்தார். ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என கேள்வி எழுப்பிய அவர், உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வதிலேயே குறிக்கோளாக இருப்பதாக விமர்சித்தார்.

மேலும் படிக்க | டிட்கோ தொழிற்பூங்கா - தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பு

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் கடன் 55 லட்சம் கோடியாக இருந்த நிலையில், பிரதமர் மோடி காலத்தில் 135 லட்சம் கோடி கடனாக மாற்றியிருப்பதான் பொருளாதார வளர்ச்சியா? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பாஜக எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது எனக் கூறிய அவர், திமுக வாரிசு அரசியல் தான் செய்வதாக கூறினார். கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகி இருக்கிறார். விரைவில் அவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என தெரிவித்த வி.பி.ராஜன், தான் இருக்கும்போதே இன்பநிதியும் முதலமைச்சராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வி.பி.ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு அவரது மகன் தான் கட்சி கொடியை தூக்கிப் பிடிப்பார். ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் அவர்களது குடும்பத்தில் இருப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது ஆசை. திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது, அதனால் நாட்டு மக்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிட்டது என்றும் வினவினார். அமைச்சராக இப்போது பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அவரது மகன் இன்பநிதி முதலமைச்சராக வரவேண்டும் என திமுக உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வி.பி.ராஜன் பேசியிருப்பது எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வதற்கு ஏதுவாக அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக திகழும் தமிழ்நாடு! சிறப்பாக செயல்படும் தமிழக அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News