வடிவேல் காமெடி பாணியில் ‘எங்கள் ஊரின் பெயரைக் காணோம்’ என்று கிராம மக்கள் போராட்டம்

Name Board Missing Like Vadivel Comedy : நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற காமெடி பாணியில் 'எங்கள் ஊரின் பெயரைக் காணோம்’ என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 30, 2022, 09:10 AM IST
  • ‘எங்கள் ஊரின் பெயரைக் காணோம்’
  • வடிவேலு காமெடி பாணியில் கிராம மக்கள் சாலை மறியல்
  • குறிமேடு பகுதியில் ஊர் பெயர் பலகையில் குழப்பம்
வடிவேல் காமெடி பாணியில் ‘எங்கள் ஊரின் பெயரைக் காணோம்’ என்று கிராம மக்கள் போராட்டம் title=

கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ‘கிணற்றைக் காணோம்’ என்ற காமெடி பட்டிதொட்டி எங்கும் புகழ்பெற்றது. அந்த காமெடி வந்த பிறகு அதுபோன்று ஏதாவது நூதனமாக காணவில்லை செய்திகளைக் கூட ‘வடிவேலு பட பாணியில்’ என்று முன்னாடி போடும் அளவுக்கு அந்த காமெடி வெகுஜன மக்கள் மத்தியில் பிரபலம். 

மேலும் படிக்க | 29c-ம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்.!

இதுமட்டும்மல்ல, யதார்த்த வாழ்வில் நூதனமாக நடைபெறும் பெரும்பாலான சம்பவங்களைக் கூட வடிவேலு பட பாணியில் என்ற சொற்றொடர்களை பயன்படுத்தும் அளவுக்கு தனது காமெடி மூலம் அனைவரையும் கவர்ந்தவர் வடிவேலு. அவர் நடித்த கிணற்றைக் காணோம் வசனத்தைப் போலவே ‘எங்கள் ஊரின் பெயரைக் காணோம்’ என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிமேடு என்ற பகுதியில் பேருந்து நிலையத்தில் அரசு சார்பில் ஊரின் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பலகையில் ஊரின் பெயரான குறிமேடு என்று எழுதுவதற்குப் பதில் சின்னப்பணிச்சேரி பேருந்து நிறுத்தம் என்று எழுதியிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குறிமேடு பகுதி மக்கள், இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்டுள்ளார்கள். அதற்கு  அவர்,  'அரசின் பதிவேட்டில் உள்ளதைத்தான் நாங்கள் பெயர் பலகையில் வைத்துள்ளோம் ' என்று பதில் கூறியுள்ளார்.

இந்தப் பதிலில் திருப்தியடையாத குறிமேடு மக்கள், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பலமுறை பெயர் பலகையில் பிழை உள்ளதாகவும், அதனை மாற்றியமைக்குமாறும் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டாததால் விரக்தியடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிமேடு பகுதியில் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க | சிங்கார சென்னை 2.0... பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் உள்ள சாதி பெயர் அகற்றப்படுமா

இதனால் சம்பவ இடத்துக்கு வந்த மாங்காடு காவல் ஆய்வாளர் ராஜி போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கிராம மக்கள் கலைந்துசென்றனர். ஊரின் பெயர்ப் பலகையில் தங்களது ஊரின் பெயரையே காணோம் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News