சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்தத் தெருக்களின் பெயர் பலகைகளை சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணி சென்னை மாநகராட்சி சார்பி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி 8.43 கோடி ரூபாய் செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்தப் பணியுடன் சேர்த்து தெருக்களின் பெயர்களில் இருக்கும் சாதி பெயர்களை நீக்கும் நடவடிக்கையையும் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி 13ஆவது மண்டலம் 171ஆவது வார்டில் இருக்கும் சாலை ஒன்றுக்கும் அப்போவோ கிராமணி இரண்டாவது தெரு என பெயர் இருந்தது.
இந்தப் பெயரை மாற்றக்கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து அந்தச் சாலையின் பெயர் அப்பாவு (கி) தெரு என சென்னை மாநகாரட்சி சார்பில் மாற்றப்பட்டுள்ளது.
அதேசமயம், சென்னை நந்தனம் முதல் மந்தைவெளி வரை இருக்கும் இணைப்புச் சாலைக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை என ஏற்கனவே பெயர் இருந்தது.
மேலும் படிக்க | நடுக்கடலில் தங்க கட்டிகளுடன் சிக்கிய கும்பல் - இலங்கை டூ தமிழ்நாடு என்ன நடக்கிறது?
தெருக்களில், சாலைகளில் இருக்கும் சாதி பெயர்களை நீக்கும் சென்னை மாநகராட்சி இந்த சாலைக்கு ‘பசும்பொன் முத்துராமலிங்க (தேவர்) சாலை’ என பெயர் மாற்றம் செய்துள்ளது. தற்போது சென்னை மாநகராட்சியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாதி பெயரை நீக்குவது என்றால் முழுமையாக நீக்க வேண்டியதுதானே அது ஏன் பசும்பொன் முத்துராமலிங்க சாலைக்கு மட்டும் சாதி பெயரை ப்ராக்கெட்டில் வைக்க வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
மேலும் படிக்க | Crime: என் மனைவியை நான் அடிப்பேன், உனக்கென்ன... கள்ளக்காதனுக்கு அரிவாளால் வெட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR