மக்களை பாதிக்காத வகையில் பால் விலை உயர்த்தப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்!
சாத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவிக்கையில்., பால் விலை உயர்வு உயர்த்தப்படும் என சட்டபேரவையில் முதல்வர் தெரிவிக்கைவில்லை, பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? என்று கேட்டார்கள். அதற்கு முதல்வர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் பாதிப்பு ஏற்படும். எனவே கொள்முதலும், நுகர்வோரும் பாதிக்காத வகையில் அந்த பணி நிகழும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் "வளமான நாடாக, ஏழைகள் இல்லாத நாடாக அமைய மத்திய பட்ஜெட் வழிவகுத்துள்ளது. பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதுதான் நடைமுறைக்கு வரும் என்பது இல்லை. அரசு நினைத்தால் எந்த திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ஜலசக்தி துறை என்று கொண்டு வந்துள்ளனர். அதில் நதி நீர் இணைப்பு வரும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு கொண்டு வந்தது ஜெயலலிதாதான். அவரை பின் பற்றியது திமுக. அதிமுக அரசை குறைகூறும் திமுக, வரலாற்றை சிந்தித்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
பெட்ரோல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு., "இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட நிலைப்பாடு. தமிழகம் மட்டும் அல்ல பொருளாதார உயர்வு வரவர, சம்பள உயர்வுகள் வரவர விலைவாசி உயரத் தான் செய்யும். மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த விலைவாசி உயர்வு இருக்கும் எனவும் தெரிவித்தார்.