மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 201.75 ஏக்கரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
Tamil Nadu: Prime Minister Narendra Modi lays the foundation stone for AIIMS (All India Institutes of Medical Sciences) Madurai. He also inaugurated super-speciality blocks at medical colleges in Thanjavur and Tirunelveli. pic.twitter.com/LjzrOytYRS
— ANI (@ANI) January 27, 2019
டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்தது. அந்தவகையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் தொடங்கின. இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி, காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளவுந்தராஜன் ஆகியோர் மலர் கொத்து வழங்கி வரவேற்றனர்.
Tamil Nadu: Prime Minister Narendra Modi arrives in Madurai. He will attend multiple events in the city today. pic.twitter.com/u5mwf2O1Bi
— ANI (@ANI) January 27, 2019
இதைதொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி சாலை வழியாக சென்றார். மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 201.75 ஏக்கரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி