பிரதமர் மோடி சென்னை வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை நடைபெறும் ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Last Updated : Feb 23, 2018, 11:27 AM IST
பிரதமர் மோடி சென்னை வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு! title=

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை நடைபெறும் ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் திட்டத்தை துவங்க பிரதமர் மோடி நாளை சென்னை சென்னை வருகிரார்.

பிரதமர் நரேந்திரமோடி விழாவில் பங்கேற்று பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நாளை மாலை 5.30 மணி அளவில் விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை பிற்பகல் சென்னை வருகிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் மோடி அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமான படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். பின்னர் கார் மூலமாக கலைவாணர் அரங்குக்கு சென்று ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 கம்பெனி சிறப்பு போலீஸ் படையினரும் கண்காணித்து வருகிறார்கள். 

ஸ்கூட்டர் வழங்கும் விழா முடிவடைந்ததும் அங்கிருந்து நேராக கிண்டி கவர்னர் மாளிகைக்கு செல்லும் மோடி நாளை இரவு அங்கு தங்குகிறார். நாளை மறுநாள் புதுச்சேரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதற்காக நாளை காலையில் கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து புதுவை செல்கிறார். புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை இரவே சென்னை திரும்பும் மோடி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். 

Trending News