EPFO 3.0: இனி ATM மூலம் PF தொகையை எடுக்கலாம், டெபாசிட் வரம்பு இல்லை.... அரசு திட்டமிடும் அதிரடி மாற்றங்கள்

EPFO Update: சுமார் 6 கோடி நிறுவன ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தி வரும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) மறுசீரமைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 29, 2024, 11:10 AM IST
  • EPFO -வில் வரப்போகும் பல முக்கிய மாற்றங்கள்.
  • இபிஎஃப் பங்களிப்பை அதிகரிக்க வழிவகை செய்யப்படும்.
  • ஏடிஎம் -இல் இருந்து வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம்.
EPFO 3.0: இனி ATM மூலம் PF தொகையை எடுக்கலாம், டெபாசிட் வரம்பு இல்லை.... அரசு திட்டமிடும் அதிரடி மாற்றங்கள் title=

EPFO Update: EPFO 3.0 புதுப்பிப்பு: சுமார் 6 கோடி நிறுவன ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தி வரும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) மறுசீரமைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இன்னும் சில நாட்களில் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) பல புதிய நன்மைகள் அறிவிக்கப்படலாம். ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை செலுத்தும் வரம்பு நீக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

EPFO -வில் வரப்போகும் பல முக்கிய மாற்றங்கள்

இந்த மாற்றங்கள் அனைத்தும் EPFO ​​3.0 -இன் அங்கமாக இருக்கும் என கூறப்படுகின்றது. பணியாளர்கள் தங்கள் சேமிப்புத் திறனுக்கு ஏற்ப சேமநிதிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பங்களிக்க முடியும் என்ற நிலை கூடிய விரைவில் வரும். மேலும் இபிஎஃப் கணக்கு (EPF Account) வைத்திருப்பவர்கள் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்த பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்கும் வசதியும் அளிக்கப்படலாம்.

EPF Contribution: இபிஎஃப் பங்களிப்பை அதிகரிக்க வழிவகை செய்யப்படும்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சில மூத்த அதிகாரிகள் இது குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்டனர். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடிய EPFO ​​3.0 ஐ கொண்டு வர அரசாங்கம் தீவிரமாக தயாராகி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் மிக முக்கியமானது, வருங்கால வைப்பு நிதிக்கான ஊழியர்களின் பங்களிப்பு வரம்பை அதிகரிப்பதாகும். தற்போது, ​​ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 12% தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என்ற விதி உளது. 

புதிய அறிவிப்புகளின் கீழ், அரசாங்கம் இந்த வரம்பை நீக்கக்குடும் என கூறப்படுகின்றது. பணியாளர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் தங்கள் சேமிப்புத் திறனுக்கு ஏற்ப டெபாசிட் செய்யலாம். அதன் நோக்கம் சந்தாதாரர்களுக்கு முடிந்தவரை சேமிப்பதற்கான விருப்பத்தை வழங்குவதாகும். இந்த இபிஎஃப் தொகையை (EPF Amount) ஓய்வு பெறும் சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்குவதற்கான விருப்பமாக மாற்றலாம். இருப்பினும், முதலாளிகள் / நிறுவனங்களின் பங்களிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த சூத்திரம் குறித்து தொழிலாளர் அமைச்சகம் விவாதித்து வருகிறது.

மேலும் படிக்க | EPF பங்களிப்பில் மாற்றம், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: ஊழியர்களின் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு திட்டம்

ஏடிஎம் -இல் இருந்து வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம்

EPFO சந்தாதாரர்களுக்கு அரசாங்கம் மற்றொரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும். இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு டெபிட் கார்டு போன்ற ஏடிஎம் கார்டு வழங்கப்படலம். இதன் மூலம் டுவதால், வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை ஏடிஎம்மில் இருந்து அவர்கள் எடுக்க முடியும். அதாவது, உழைத்து சம்பாதித்து, வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்த பணத்தை ஊழியர்கள் ஏடிஎம்மில் (ATM) இருந்து எடுக்கும் வசதியை ஊழியர்களுக்கு வழங்க அரசு தயாராகி வருகிறது. 

இதில், சந்தாதாரர்கள் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும். EPFO ​​இன் புதிய கொள்கையை அரசாங்கம் 2025 புதிய ஆண்டில் அறிவிக்கலாம் என்று, EPFO ​​3.0 மே-ஜூன் 2025 இல் செயல்படுத்தப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

EPFO ​​IT System: இபிஎஃப்ஓ ஐடி அமைப்பு மேம்படுத்தப்படும்

EPFO இன் IT அமைப்பில் பெரிய மேம்பாடுகளைச் செய்ய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருகிறது. ஊழியர்கள் அனைத்து விடஹ் பரிவர்த்தனையையும் எளிதாக செய்ய இந்த மேம்பாடுகள் மூலம் வழிவகை செய்யப்படும். இந்த மேம்பாடுகளுக்கான பணிகள் இரண்டு கட்டங்களில் தயாரிக்கப்படுகிறன. 

- EPFO 2.0 இன் கீழ் உள்ள கணினி சீர்திருத்தங்கள் அடுத்த மாதம் 2024 டிசம்பரில் நிறைவடையும். இது அமைப்பில் உள்ள 50 சதவீத பிரச்சனைகளை தீர்க்கும். 
- EPFO 3.0 மே-ஜூன் 2025க்குள் நிறைவடையும். இதில் தகவல் தொழில்நுட்ப அமைப்பில் மேம்பாடுகளும் அடங்கும்.

அரசாங்கத்தின் நோக்கம் EPFO ​​இன் செயல்பாட்டை சர்வதேச தரத்தின்படி செய்வதே ஆகும்.

மேலும் படிக்க | பணி ஓய்வு காலத்தில் பெரிய கார்பஸை உருவாக்க உதவும் டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News