காவல் துறையில் இனி தமிழ் தழைக்கட்டும்... இராமதாசு பாராட்டு!

தமிழ்நாடு காவல்துறையில் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 26, 2019, 10:40 AM IST
காவல் துறையில் இனி தமிழ் தழைக்கட்டும்... இராமதாசு பாராட்டு! title=

மிழ்நாடு காவல்துறையில் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள், ஆணைகள், கடிதத் தொடர்புகள், கையெழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது. காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும்.... கனிவு பெருகட்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக காவல்துறையில் இனி கடித பரிமாற்றம் உட்பட அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என தமிழக DGP திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். காவல்துறை வாகனங்கள் அனைத்திலும் தமிழில், "காவல் துறை" என இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும், வருகைப் பதிவேட்டில் கூட அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும் எனவும் திரிபாதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையில் தமிழ் பன்பாடு குறித்து DGP திரிபாதிக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் அனுப்பிய அறிக்கையை அடுத்து, காவல் நிலையங்களுக்கு DGP திரிபாதி இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு துறைகளில் தமிழ் மொழி சிறிது சிறிதாய் மறுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக காவல்துறையில் தமிழை வளர்க்க தலைமை மேற்கொண்டுள்ள நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைகளை பாராட்டும் விதமாக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பாமக நிறுவனர் இராமதாசு., "தமிழ்நாடு காவல்துறையில் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது" என தெரிவித்துள்ளார்.

Trending News