கமல்ஹாசன் வீட்டிற்குள் திருட புகுந்த மர்ம நபர் கைது!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்! 

Last Updated : Jun 30, 2018, 01:57 PM IST
கமல்ஹாசன் வீட்டிற்குள் திருட புகுந்த மர்ம நபர் கைது!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்! 

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தற்போது அரசியல் மற்றும் பிக்பாஸில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டினுள் மர்ம இளைஞர் ஒருவர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

வீட்டிற்குள் நுழைந்த நபரை அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவர் பிடித்து, பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த இளைஞரை கைது செய்து விசாரித்தனர். அந்த இளைஞர் திட்டக்குடியை சேர்ந்த சபரிநாதன் என்று தெரியவந்துள்ளது. 

கமல் வீட்டில் திருட முயற்சித்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் வீட்டில் பென்ட்ரைவ் காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

More Stories

Trending News