ரூ.70 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல் - சினிமா பாணியில் 6 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த தொழிலதிபரைக் கடத்தி 70 லட்சம் ரூபாய் கேட்டு பணம் கேட்டு மிரட்டிய கும்பலை புதுக்கோட்டை போலீசார் 6 மணி நேரத்தில் கைது செய்ததோடு, கடத்தப்பட்ட தொழிலதிபரையும் மீட்டனர். 

Written by - Chithira Rekha | Last Updated : Jul 3, 2022, 05:25 PM IST
  • ரூ.70 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்
  • 6 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை
  • கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது
ரூ.70 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல் - சினிமா பாணியில் 6 மணி நேரத்தில் மீட்ட போலீசார் title=

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(67). இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்ததாரராக உள்ளார். இன்று காலை 5 மணிக்கு இவர் வழக்கம் போல் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது காரில் வந்த 5 மர்ம நபர்கள் அவரைக் கடத்தியுள்ளனர்.

நடை பயிற்சிக்குச் சென்ற தனது தந்தை வீடு திரும்பாததால் அவரது மகன் மணிகண்டன் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பின் காலை 11.45 மணிக்கு மணிகண்டனின் செல்போன் எண்ணிற்கு அழைத்த மர்மநபர்கள் அவரது தந்தை சந்திரசேகரனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க ரூ.70 லட்சம் பணம் தர வேண்டுமெனவும் மிரட்டி தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மணிகண்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தனிப்படை போலீசார் மர்ம நபர்களின் செல்போன் எண்களை கண்காணித்து அதன் அடிப்படையில் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை அறிந்த கடத்தல் கும்பல், சந்திரசேகரனை காரில் வைத்துக் கொண்டு புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் சுற்றித் திரிந்தனர்.

மேலும் படிக்க | கூடுவாஞ்சேரி அருகே நிறை மாத கர்ப்பிணி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை

இதனையடுத்து போலீசார் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து கடத்தல் கும்பலை விரட்டிப் பிடிக்க முயன்றனர். மாலை 5 மணி அளவில் போலீசார் தங்களை விரட்டுவதை அறிந்த மர்ம நர்கள் சந்திரசேகரனை திருச்சி மாவட்டம் சூரியூர் சாலையில் இறக்கிவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசாரின் உதவியுடன் தந்தை சந்திரசேகரனை மணிகண்டன் பத்திரமாக மீட்டார். 

கடத்தல்காரர்களின் செல்போனை வைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். தொழிலதிபரை கடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரும் கீரனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணத்திற்காக மட்டும்தான் தொழிலதிபரை கடத்தினார்களா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,  கிராம நிர்வாக அலுவலருக்கும் தொழிலதிபர் சந்திரசேகரனுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முன் விரோதம் இருந்ததாகவும் அதன் அடிப்படையில் தொழிலதிபர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

சினிமா பாணியில் கடத்தல் கும்பலை 6 மணி நேரத்தில் மீட்டதோடு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்த சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | கந்துவட்டி கொடுமையால் மருந்து குடித்து உயிரைவிட்ட இளைஞர் - அம்மாவுக்கு அனுப்பிய கடைசி வீடியோ !!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News