மிக்ஜாம் புயல்: சென்னைக்கு கரண்ட் எப்போது மீண்டு வரும்? அமைச்சர் தங்கம் தென்னரசு அப்டேட்

சென்னையில் கரண்ட் இல்லாத பகுதிகளில் மீண்டும் எப்போது மின்சாரம் வரும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 4, 2023, 06:50 PM IST
  • சென்னையில் பல இடங்களில் மின்தடை
  • போர்கால அடிப்படையில் நடவடிக்கை
  • அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
மிக்ஜாம் புயல்: சென்னைக்கு கரண்ட் எப்போது மீண்டு வரும்? அமைச்சர் தங்கம் தென்னரசு அப்டேட் title=

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மின்சாரம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது. புயலின் காரணமாக சுமார் 70 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தரைக்காற்று வீசியதால் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்திருக்கின்றன. இதில் மின்கம்பிகள் மீதும் மரங்கள் விழுந்திருக்கின்றன. மேலும், தொடர்ச்சியாக நேற்றிரவு முதல் மழை பெய்து கொண்டே இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் துணை மின்நிலையங்களை வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால் மின்சாரம் விநியோகிக்க முடியவில்லை. 

சில பகுதிகளில் இணையமும் முழுமையாக முடங்கியுள்ளது. மிக்ஜாம் புயல் சென்னையை கடக்கும் வரை இதே நிலை தான் நீடிக்கும். அதாவது ஆந்திர பகுதியை புயல் அடையும்போது சென்னையில் மழை படிப்படியாக குறையும். அத்துடன் புயலால் சேதமடைந்த பகுதிகளில் நிவாரணப் பணிகளும் முடுக்கிவிடப்படும். இப்போதைய சூழலில் படிப்படியாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் கொடுக்கப்பட்டு வருகின்றன. மழை குறைந்த பகுதிகளில் இருக்கும் துணை மின் நிலையங்களில் தண்ணீர் வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. அதேபோல் சேதமடைந்த மின்கம்பிகளை சரிசெய்யும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சென்னை மக்களே அலெர்ட்... நிக்காமல் வெளுக்கும் மிக்ஜாம்... வெதர்மேனின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

வேளச்சேரி, மடிபாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அங்கு தண்ணீர் வடிந்த பிறகு மின்சாரம் இல்லாத பகுதிகளில் மின்விநியோகம் சீர் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்திருக்கும் விளக்கத்தில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் சீர் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மின்சாரத்துறை ஊழியர்கள் அரசின் மற்ற துறை ஊழியர்களோடு இணைந்து தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு மின்சாரம் கொடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சில இடங்களில் துணை மின் நிலையங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அந்த தண்ணீர் வடிந்த பிறகு எல்லா பகுதிகளிலும் மின் விநியோகம் கொடுக்கப்படும். குறிப்பிட்ட சில பகுதிகளில் தண்ணீர் வடிவதில் பிரச்சனை இருப்பதால் மின் விநியோகம் கொடுக்க முடியவில்லை. மழை நின்றபிறகு, தேங்கிய நீரை அகற்றிய பிறகு மின்சாரம் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | சென்னை புயலில் மனிதர்கள் உள்ளே! முதலைகள் வெளியே... மிக்ஜாம் சூறாவளி வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News