சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாயார் புகார்! இது என்ன புது பிரச்சனை..?

Actor Dhanush Mother : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் தாயார், நடிகர் சரத்குமார் மீது புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 6, 2024, 08:57 AM IST
  • மொட்டை மாடியை ஆக்கிரமித்த சரத்குமார்
  • தனுஷின் தாயர் கொடுத்த புகார்
  • நடந்தது என்ன? முழு விவரம்!
சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாயார் புகார்! இது என்ன புது பிரச்சனை..? title=

Actor Dhanush Mother : சமீப காலமாக திரையுலகில் நடைபெறும் விஷயங்கள் ஒரு சில சமயங்களில் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் பலர் ஈடுபட்ட விதமும், அவர்களின் செயல்களும் கூட வைரலானது. இந்த நிலையில், தற்போது நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் மீது தனுஷ் குமாரின் தாய் புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

தனுஷின் தாயார்:

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர், நடிகர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவர் 2002ஆம் ஆண்டு தனது முதல் படமான துள்ளுவதோ இளமை மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருந்ததால் தனுஷிற்கு ஆரம்பத்தில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. தந்தை, அண்ணன் என தனுஷ் குடும்பத்தில் பெரும்பான்மையானோர் சினிமாவில் இருக்க, அவரது தாயார் அப்படி எந்த சினிமா ஆர்வமும் இல்லாமல் இருக்கிறார். கஸ்தூரி ராஜாவின் மனைவியும் தனுஷின் தாயாருமான விஜயலக்‌ஷ்மி, பெரிதாக கேமரா முன்பு எங்கும் வந்ததில்லை. இவர், இல்லத்தரசியாக இருப்பதாக கூறப்படுகிறது. செல்வராகவன், தனுஷ், விமலா கீதா, கார்த்திகா தேவி உள்ளிட்ட 4 பிள்ளைகளுக்கு தாய் இவர். 
சரத்குமார் மீது புகார்:

தனுஷின் தாயார், நடிகரும் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் மீது புகார் கொடுத்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சரத்குமாருக்கு, சென்னையின் முக்கிய பகுதிகளுள் ஒன்றான தியாகராய நகரின் பிரதான இடத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் சொந்தமாக தரைதளத்தில் ஒரு வீடு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில், தனுஷின் பெற்றோரும் வசித்து வருகிறார்களாம். இவர்கள் இருக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடி அனைவருக்கும் பொதுவானதாகும். ஆனால், நடிகர் சரத்குமார் இந்த மொட்டை மாடியை தனது சொந்த விஷயங்களுக்காகவும் வணிக ரீதியாகவும் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. 

வழக்கு விசாரணை:

சரத்குமாரின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, அந்த அடுக்குமாடி வீட்டு குடியிருப்பில் இருக்கும் அனைவரும் சரத்குமார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். அப்படி வழக்கு தொடர்ந்தவர்களுள், நடிகர் தனுஷின் தாயரும் ஒருவர். இந்த விவகாரத்தில் சரத்குமாரும் மாநகராட்சியும் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | தன்னை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள சரத்குமார்!

பாஜகவுடன் கூட்டணி வைத்த சரத்குமார்..

நடிகர் சரத்குமார், படங்களில் நடித்து வருவதோடு அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தனது மனைவியுடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இதனால் தமிழக மக்களிடையே பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தார். 

இதையடுத்து, நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். இதில், இவரை எதிர்த்து போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் (இந்திய தேசிய காங்கிரஸ்) 36.3% சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ராதிகா, 15.7% வாக்குகள், அதாவது 1,66,271 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னர் தனது மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் கோயில் அங்கபிரதக்ஷனம் செய்த வீடியோவும் வைரலானது. 

மேலும் படிக்க | Sarathkumar : மகள் வரலட்சுமிக்காக பாஜகவில் ஐக்கியமானாரா சரத்குமார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News