பிரதமர் மோடி - அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். ராஜ்நாத் சிங் முதல் நிதின் கட்கரி வரை இந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 5, 2024, 08:09 PM IST
  • பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக போர்க்கொடி
  • டெல்லி பாஜகவில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல்
  • ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் எதிர்ப்பு என தகவல்
பிரதமர் மோடி - அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி! title=

லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 292 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் ஆட்சி அமைக்க 273 சீட்டுகள் தேவை என்ற நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. பிரதமர் மோடி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர இருக்கிறார். 2014, 2019 ஆகிய இரண்டு லோக் சபா தேர்தல்களிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெறவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவு மைனாரிட்டி அரசாக ஆட்சி அமைக்க இருக்கிறது. 

மேலும் படிக்க | கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்க தயாராகவே இருந்தது. ஆனால், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு செல்ல மறுத்துவிட்டனர். அவர்கள் பாஜகவுடன் இருக்கவே முடிவு செய்துவிட்டதால், இந்தியா கூட்டணி கட்சியினர் இப்போதைக்கு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட முடிவெடுத்துள்ளனர். இந்த சூழலில் பாஜகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. அதுவும் இம்முறை வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, மோடி- அமித் ஷா ஆகியோருக்கு எதிராக மூத்த தலைவர்கள் கட்சிக்கு அணி திரள தொடங்கியுள்ளனர். 

ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் வெளிப்படையாக தங்களின் அதிருப்தியை காட்ட தொடங்கிவிட்டனர். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதும், பாஜக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வழிகாட்டுதலில் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வளவு நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி - அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பாஜக வெற்றிகளை பெற்று வந்ததாக கூறி வந்த நிலையில், இம்முறை தன்னுடைய வாழ்த்து செய்தியில் தப்பி தவறிகூட பயன்படுத்தவில்லை. 

ராஜ்நாத் சிங்கின் இந்த எக்ஸ் பதிவை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, பாஜகவில் உட்கட்சி பூசல் இருப்பதை பார்க்க முடிகிறது, ஷா பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை என கூறியுள்ளார்.  இதேபோல் நிதின் கட்கரி கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் மோடி- அமித் ஷா மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். அவர் பிரதமர் பதவியை பெற ஆர்எஸ்எஸ் மூலம் முயற்சித்த நிலையில், அதற்கான சூழல் உருவாகவில்லை. இதனால் அமைதி காத்து வரும் நிதின் கட்கரி தகுந்த சூழலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். பாஜகவின் இந்த தொங்கு பாராளுமன்றம் ஆட்சி முறையாக செல்லவில்லை என்றால், உடனடியாக நரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணி பாஜகவில் ஓரங்கட்டப்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதற்கான நேரத்தை தான் பாஜகவில் இருக்கும் சீனியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்கிறது டெல்லி அரசியல் வட்டாரம்.  

மேலும் படிக்க | வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News