பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை... வந்தது புதிய தகவல்...!

Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Jun 6, 2024, 04:13 PM IST
  • என்டிஏ எம்.பி.,களின் கூட்டம் நாளை நடைபெறும்.
  • நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.
  • பதவியேற்பு விழாவில் பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை... வந்தது புதிய தகவல்...! title=

Narendra Modi Swearing In Ceremony: 293 தொகுதிகளை வென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். என்டிஏ கூட்டணியில் பாஜக 240 தொகுதிகளையும், தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளையும் அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தன. 

அந்த வகையில், பிரதமர் மோடி 17ஆவது மக்களவையின் அமைச்சரவை கலைக்கும் பரிந்துரையையும், அவரின் ராஜினாமா கடிதத்தையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்தார். தொடர்ந்து அடுத்த அரசு அமையும் வரை பிரதமர் மோடி காபந்து பிரதமராக தொடர்வார். இதனால் உடனடியாக ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

என்டிஏ தலைவர் நரேந்திர மோடி

தேசிய ஜனநாய கூட்டணியில் உள்ள கட்சிகளின் கூட்டம் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் டெல்லி இல்லத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் ஆகிய பாஜக தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், பவன் கல்யாண் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு... என்னென்ன கேட்குறாரு பாருங்க?

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் என்டிஏ கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு கடிதம் அளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதை தொடர்ந்து உடனடியாக ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தகவல்கள் வெளியாகின. இருப்பினும், கூட்டணி கட்சித் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரின் அமைச்சரவை சார்ந்த கோரிக்கையை பாஜக தொடர்ந்து பரிசீலித்து வந்தது.

ஜூன் 9ஆம் தேதி பதவியேற்பு...

இருப்பினும், ஜூன் 7ஆம் தேதியான நாளை டெல்லி நாடாளுமன்ற கூட்ட அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 8ஆம் தேதி பிரதமராக பதவியேற்பார் என கூறப்பட்டது. 

3வது முறையாக தொடர்ந்து பதவியேற்பு

ஆனால், தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்தி மோடி ஜூன் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றால் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பவர் என்ற பெருமையை அவர் பெறுவார். 

பல நாட்டு தலைவர்கள் பங்கேற்பு

அந்த வகையில், ஜூன் 9ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் முக்கியத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்தல் வெற்றிக்கு தொலைபேசியில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு மோடி அழைத்ததாக இலங்கை அதிபரின் அலுவலக ஊடகப் பிரிவு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. 

இதேபோன்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைத்ததாகவும், அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் பதவியேற்பு விழாவிற்கு நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா , பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமாா் ஜக்நாத் ஆகியோர் அழைக்கப்பட உள்ளதாகவும், முறையான அழைப்பிதழ்கள் இன்று அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | அக்னி வீரர் திட்டம் முதல் சாதி வாரி கணக்கெடுப்பு வரை... நிதீஷ் குமாரின் சில கோரிக்கைகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News