மருத்துவர்களின் அலட்சியம்... கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்... பறிபோன உயிர்கள்..!

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்த நிலையில், தாயும் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 9, 2022, 04:28 PM IST
  • பிரசவம் பார்க்க மருத்துவர்கள் வரவில்லை என குற்றச்சாட்டு
  • குழந்தை உயிரிழந்த நிலையில் தாயும் உயிரிழப்பு
  • உறவினர்கள் சாலை மறியல்
மருத்துவர்களின் அலட்சியம்... கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்... பறிபோன உயிர்கள்..!  title=

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த வினோத் என்பவரது மனைவி சென்னம்மாளுக்கு நேற்று காலை சுகப்பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. பிரசவத்துக்கு பிறகு தாய் சென்னம்மாள் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. உயர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்னம்மாள் அனுப்பப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று தானிப்பாடி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், சாலை மறியல் போராட்டத்தால் திருவண்ணாமலையிலிருந்து அரூர் செல்லும் சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. என்ன நடந்தது?

போராட்டம்

 

மேலும் படிக்க | 3 மாணவர்கள் பலி - 83 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளி!

கடந்த 7 ஆம் தேதி காலை தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சென்னம்மாள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்று மதியம் வரை மருத்துவர்கள் யாரும் வராததால் சென்னமாளின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை செவிலியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக செவிலியர்கள் சென்னம்மாள் தந்தையிடம் தெரிவித்துள்ளனர், மேலும் சென்னம்மாள் உடல்நிலையும் மோசமாக உள்ளதால் அவரை உயர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார், 

திருவண்ணாமலை

மேலும் படிக்க | "ஆபாசமாக பேசுவது ஆபத்தானது" - பப்ஜி மதனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த சென்னம்மாள் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால், பிறந்த குழந்தை இறந்ததாகவும் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னம்மாள் இறந்ததாகவும் கூறி சென்னம்மாள் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினரும் கிராம நிர்வாக அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News