தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை ரூ 4 உயர்வு

Milk price in Tamil Nadu hiked by Rs 4 per liter: ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 12, 2022, 01:11 PM IST
  • தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறது
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை ரூ 4 உயர்வு title=

தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்தது. இந்த விலை இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததுள்ளது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் நாள்தோறும் 16.41 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்களை விற்பனை செய்கிறது. அதேநேரம் தனியார் நிறுவனங்கள் தினமும் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன.

தமிழகத்தில் 84 சதவீத பாலின் தேவை, தனியார் பால் நிறுவனங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் எந்தவித யோசனைகளும் செய்யாமல், யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக பால் நிறுவனங்கள் விலையை அதிகரித்து வருகிறார்கள். இந்த போக்கு மிகவும் தவறானது. கொரோனா காலத்தில் விற்பனை சரிந்து விட்டதாக கூறி விலையை உயர்த்தினார்கள். இப்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில் எதற்காக இந்த உயர்வு? தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தனியார் பால் விலை நிர்ணயம் குறித்து சரியான வரைமுறைகளை கையாள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிப்பு விரைவில்

ஏற்கெனவே கடந்த பிப்ரவரி, மே மாதங்களில் தனியார் பால் மற்றும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டில் தற்போது 3வது முறையாக தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன.

இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. மேலும், தனியார் பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும், தனியார் பால் விலையை உயர்த்துவதை வரைமுறைப்படுத்த பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யும் வகையில், பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News