வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கான இறுதி அஞ்சலி -மாநில அரசு எச்சரிக்கை

லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 12, 2021, 11:28 AM IST
  • கொல்லப்பட்ட விவசாயிகளுக்காக இன்று இறுதி அஞ்சலி ஏற்பாடு.
  • இறுதி அஞ்சலியில் காங்கிரஸ் பிரியங்கா காந்தியும் பங்கேற்கிறார்.
  • 20 மாவட்டங்களுக்கு மாநில அரசு எச்சரிக்கை
வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கான இறுதி அஞ்சலி -மாநில அரசு எச்சரிக்கை title=

உ.பி செய்திகள்: லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்கிறார். ராகேஷ் திகைத் உட்பட பல விவசாயத் தலைவர்கள் லக்கிம்பூரை அடைந்துள்ளனர். விவசாயிகள் ஒன்றாக கூடுவதால், எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, உ.பி.யின் 20 மாவட்டங்களுக்கு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

லக்கிம்பூர் கெரியின் டிகோனியா கிராமத்தில் வன்முறை நடந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பல மாநிலங்களில் இருந்து விவசாயத் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். 

தலைவர்களின் வருகை குறித்த கேள்விக்கு, விவசாய தலைவர் பால்கர் சிங், எந்த அரசியல் தலைவரும் மேடையைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார். ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் மட்டுமே மேடையில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். 

 

ALSO READ |  ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

இன்று நாடு முழுவதும் பிரார்த்தனை மற்றும் அஞ்சலி கூட்டங்களை ஏற்பாடு செய்ய ஐக்கிய கிசான் மோர்ச்சா வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனுடன் இரவு எட்டு மணிக்கு கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீடுகளுக்கு வெளியே ஐந்து மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தியின் வருகை பற்றிய தகவலை அளித்த காங்கிரஸ் மாநில தலைவர் அஜய் குமார் லல்லு, "லக்கிம்பூர் தியாகி விவசாயிகளின் இறுதி பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக பிரியங்கா காந்தி லக்னோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். 

லக்கிம்பூர் வன்முறையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் மூன்று பா.ஜ.க.வினர் மற்றும் ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். 

ALSO READ |  லக்கிம்பூர் வன்முறை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ரா நேரில் ஆஜார்

இந்த சம்பவத்திற்கு பிறகு, அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இப்போது உ.பி. அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மீறி செயல்படுவதாக விவசாயிகள் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றால், மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News