சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி -முழு விவரம்

சென்னை, காஞ்சீபூர்ம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர தமிழகத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 31, 2020, 01:08 PM IST
  • சென்னை, காஞ்சீபூர்ம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து இயக்கம் இல்லை.
  • தமிழகத்தில் ஊரடங்கு காலத்தை ஜூன் 30 வரை நீட்டித்து முதல்வர் அறிவித்தார்.
  • ஜூன் 1 முதல் குறைக்கப்பட்ட சேவைகளுடன் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும்.
  • கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஜூன் 30 வரை லாக்-டவுன்
சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி -முழு விவரம்

சென்னை: தமிழக அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு காலத்தை ஜூன் 30 வரை நீட்டிப்பதாக அறிவித்தது. அதேநேரத்தில் பொது போக்குவரத்தை ஓரளவு இயக்குவது மற்றும் பணியிடத்தில் அதிக ஊழியர்களை அனுமதிப்பது உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.

மத இடங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து மற்றும் மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் மீதான தடைகள் தொடரும் என்று முதல்வர் கே பழனிசாமி (Edappadi Palaniswami) கூறினார்.

ஜூன் 1 முதல் குறைக்கப்பட்ட சேவைகளுடன் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும். ஆனால் மாநிலத்தில் அதிக COVID-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள சென்னை, காஞ்சீபூர்ம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படாது.

Also Read: கொரோனா வைரஸ் ஊரடங்கை ஜூன் 30 வரை தமிழக அரசு நீட்டித்தது

தனியார் வாகனங்கள் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளில் இயக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் கே பழனிசாமி (Edappadi Palaniswami) கூறினார்.

"கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாட்டிற்கு வந்த வெட்டுக்கிளிகள்!! விவசாயிகள் அச்சம்.. தமிழக அரசு ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை மாநில அரசு பல தளர்வுகளை அறிவித்தது. கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர்த்து, பணியிடத்தில் அதிக ஊழியர்களை அனுமதிப்பது மற்றும் ஷோரூம்கள் மற்றும் நகைக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது ஆகியவை இதில் அடங்கும். மால்கள் மூடப்படும் என்று முதல்வர் (Edappadi Palaniswami) கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் உள்ளது. சனிக்கிழமையன்று 938 புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் அதிக அளவில் தொற்று பாதித்துள்ளது. மொத்த தொற்று எண்ணிக்கையை மாநிலத்தில் 21,184 ஆக உயர்ந்துள்ளது.

Also Read: இந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா...பலியானவர்களின் எண்ணிக்கை 5,164ஐ தாண்டியது

மத்திய அரசு சனிக்கிழமையன்று "அன்லாக் 1" ஐ அறிவித்தது. இதில் ஊரடங்கு காலத்தில் தடை செய்யப்பட்ட, பயணம் மேற்கொள்வது, மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதித்தது.

More Stories

Trending News