மதிய உணவு சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் - 36 குழந்தைகளின் கதி என்ன ?

புதுக்கோட்டை அருகே அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் பரிசோதனைக்காக 36 குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 31, 2022, 05:32 PM IST
  • மதிய உணவு சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
  • உடன் சாப்பிட்ட 36 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
  • மதிய உணவில் கண்டெடுக்கப்பட்ட புழுக்கள், வண்டு
மதிய உணவு சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் - 36 குழந்தைகளின் கதி என்ன ?  title=

புதுக்கோட்டை தொண்டைமான் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்துவருகின்றனர். இந்நிலையில், இன்று மதியம் அங்கன்வாடி சென்ற குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது அதில் மூன்று குழந்தைகளுக்கு திடீரென மயக்கமடைந்து வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதனை கண்ட சத்துணவு அமைப்பாளர் அவர்களது குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் அங்கிருந்த குழந்தைகள் அனைவரையும் சோதனையிட்டதில் மூன்று குழந்தைகள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மற்ற குழந்தைகள் பயத்தினாலேயே ஒருவித நடுக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Pudukkottai,Anganwadi,lunch,children,Government,மதிய உணவு சாப்பிட்ட ,குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

அதனை அடுத்து அவர்களை உடனடியாக மருத்துவ குழுவினர் புதுக்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் மற்றும் புதுக்கோட்டை நகராட்சி சேர்மன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பிரவீன் குமார் ஆகியோர் வருகை புரிந்து மதிய உணவை பரிசோதனை செய்தனர்.

Pudukkottai,Anganwadi,lunch,children,Government,மதிய உணவு சாப்பிட்ட ,குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

அப்போது உணவில் வண்டு மற்றும் புழுக்கள் இருந்ததை கண்டுபிடித்து, உடனடியாக உணவை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள 36 குழந்தைகளுக்கும் சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Pudukkottai,Anganwadi,lunch,children,Government,மதிய உணவு சாப்பிட்ட ,குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

மேலும் படிக்க | பள்ளி மாணவி கடத்தல் - 10 நாட்களாகியும் மாணவியை கண்டுபிடிப்பதில் சிக்கல்

அவர்கள் நலமுடன் இருப்பதாகவும், சாதாரண பரிசோதனை செய்யப்பட்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருந்தாலும் மதிய உணவு சாப்பிட்டு 3 குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | தண்டனை வழங்கிய பெண் உயர் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு - இளநிலை உதவியாளர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News