புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 1950ஆம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தவர். நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகரான இவர் இளம் வயதில் காமராஜருக்கு மன்றமும் நிறுவியவர். ரங்கசாமியின் 72ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ரத்த தான முகாம் என பல்வேறு பணிகளை அவரது ஆதரவாளர்கள்செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் பேனர்கள், கட்அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அரசியல் கட்சி தலைவர்களை தொண்டர்கள் அவருடைய உருவப் படங்களை மட்டுமே பேனர்களில் பயன்படுத்தி வாழ்த்து தெரிவிப்பது உண்டு.
ஆனால், புதுச்சேரி முதலமைச்ச்ர் ரங்கசாமியை அவரது கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் தங்கள் விருப்பம்போல் திரைப்பட நடிகர்கள் உருவங்களில் பேனர்கள் அமைத்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அவரது பிறந்தநாள் வரும்போது பிரபலமாக இருக்கும் திரைப்பட பாணியில் பேனர்களை வடிவமைப்பார்கள். அந்தவகையில் இந்த முறை 'பொன்னியின் செல்வன்', 'விக்ரம்', 'புஷ்பா' திரைப்பட ஹீரோக்கள் ஸ்டைலில் ரங்கசாமியை வடிவமைத்து பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக 'பொன்னியின் செல்வன்' படத்தில் குதிரையேறி வரும் கார்த்திக்கு பதிலாகவும், 'விக்ரம்' படத்தில் கமலுக்கு பதிலாகவும் ரங்கசாமியின் முகத்தை பொருத்தி விதவிதமாக பேனர்கள் வைத்துள்ளனர்.
அதேசமயம் பேனர் தடைச் சட்டம் அமலில் இருக்கும் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களின் செயல் மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, பொதுமக்கள் கூறுகையில், "புதுச்சேரி முதல்வருக்கு சினிமா நடிகர் பாணியில் பேனர்கள் வைத்துள்ளனர். எந்த மாநிலத்திலும் இதுபோல் இல்லை. பொதுமக்கள் அவரை பார்க்கும்போது சினிமா நடிகரை போன்று பார்க்க வேண்டியுள்ளது. விபத்து ஏற்படும் வகையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
புதுச்சேரியை அழகுப்படுத்தும் நோக்கில் போஸ்டர் பேனர்கள் போன்றவை வைக்க தடை 2009ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது. பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்டது. தற்போது முதல்வர் ரங்கசாமி என்ன செய்வார்?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ