கோவை உக்கடம், கரும்புக்கடை பகுதிகளில் வெறி நாய் கடித்து பத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். கோவை கரும்புக்கடை, ஜிஎம் நகர், புல்லுக்காடு, போன்ற பகுதிகளில் மாநகராட்சியின் சார்பாக தூய்மை பணிகள் மேற்கொள்ளாததால் ஆங்காங்கே குப்பைகள் நிறைந்து காணப்பட்டதுடன், வெறி நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், இந்தப் பகுதி மக்கள் பலமுறை கோவை மாநகராட்சி ஆணையாளரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் தெருநாய்களை கட்டுப்படுத்தி இப்பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புகார் மனுக்களாகவும், கோரிக்கை மனுக்களாகவும் கொடுத்ததுடன் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தையும் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் புகார் குறித்து கண்டுகொள்ளாத கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தற்போது இந்த பகுதியைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட மக்களை வெறி நாய்கள் கடித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்களோ, அப்பகுதியைச் சேர்ந்த மக்களோ சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி விடக்கூடாது என்ற அச்சத்தில் தகவல் அறிந்ததும் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் வெறி நாய் கடித்ததில் சிகிச்சை பெற்றுவரும் பொது மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் படிக்க | தடயத்தை அழிக்க திருடன் செய்த காரியத்தை பாருங்கள் -சிசிடிவி காட்சி
மேலும், இது குறித்து பேசிய 84 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அலிமா ராஜா இந்தப் பகுதியில் சுற்றித் திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பலமுறை மாமன்ற கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளேன் என தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக பொதுமக்கள் திரண்டு போராட்டமும் செய்துள்ள நிலையில், கோவை மாநகராட்சி பொது மக்களின் கோரிக்கைகளின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் தற்பொழுது பொதுமக்களை வெறி நாய்கள் கடியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் கூறினார். மேலும் உடனடியாக மாநகராட்சி இந்தப் பகுதியில் சுற்றி திரிந்துவரும் வெறி நாய்களை கட்டுப்படுத்தாவிட்டால், பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், போராட்டம் என களத்தில் இறங்க வேண்டியது வரும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க: இந்தியாவையே நடுநடுங்க வைத்த தக்கர் கொள்ளையர்கள்.! வரலாற்றின் பின்னணி
மேலும் படிக்க: சிசிடிவி கேமராவை துணியால் மறைத்து பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ