ஆதாரமா? அப்புடின்னா? ஜிபி முத்து ஸ்டைலில் பல்டி அடித்த ரஜினி!

சமூக விரோதிகளால் தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 19, 2022, 07:52 AM IST
  • 2018ம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.
  • இதில் 13 பேர் பரிதாபமாக சுட்டு கொல்லபட்டனர்.
  • இது குறித்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதாரமா? அப்புடின்னா? ஜிபி முத்து ஸ்டைலில் பல்டி அடித்த ரஜினி! title=

2018ம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பிறகு அங்கு சென்று நேரில் பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் சமூக விரோதிகளால் தான் போராட்டம் நடைபெற்றதாக பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தில் சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டதற்கு தன்னிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்துள்ளது.

rajini

மேலும் படிக்க | ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் பெரும் திரளாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் 2018ம் ஆண்டு மே 22 அன்று பொது மக்கள் மீது காட்டுமிராண்டி தனமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது,  இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இது குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.  

தற்போது தமிழக சட்டமன்றத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  அதில், துப்பாக்கி சூட்டில் எந்த வித விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.  உதவி எஸ்பி மற்றும் டிஐஜி உத்தரவில் நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி சூடு ஐஜிக்கு கூட தெரியவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  மேலும் 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் படிக்க | தீண்டாமை இன்னும் பள்ளிகளில், கோவில்களில் தொடர்கிறது: கொதிக்கும் ஆர்.என்.ரவி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News