தமிழக நகர்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ.வின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றபோது அவரை மர்ம கும்பல் கடத்தியது.
பின்னர் ராமஜெயத்தின் கை, கால்களை கட்டியபடி தாக்கி, வாயில் பிளாஸ்திரி ஒட்டி கொலை செய்து, உடலை திருவளர்சோலை பகுதியில் அந்த மர்ம கும்பல் வீசிச்சென்றது.
இந்த வழக்கை முதலில் கையில் எடுத்த திருச்சி காவல்துறை சுறுசுறுப்பாக பணியாற்றி குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் அவா்கள் பல்வேறு தரப்புகளிடம் விசாரணைகளை நடத்தியும் எந்தவிதி முன்னேற்றமும் இல்லாமல், இருந்தது.
பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தியும் கொலையாளிகள் யார்?, ராமஜெயம் எதற்காக கடத்தி கொலை செய்யப்பட்டார்? என்பதற்கான எந்தவித தடயமும் சிக்கவில்லை.
இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் மனைவி லதா, சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறோம். எனவே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமானால் சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என கூறி இருந்தார்.
மேலும் படிக்க | காசி விசுவநாதர் கோவில் வழக்கில் முக்கிய வழிகாட்டுதலை வழங்கிய நீதிமன்றம்
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதிக்குள் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.
பின்னர் திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து மனுதாரரின் கோரிக்கைக்கு இணங்க சென்னை உயர் நீதிமன்றம் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சில மாதங்களுக்கு முன்பு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் இதுவரை 198 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தகவல் அளித்தனர். ஆனால், தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் வேலைநேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை!
இவ்வாறு இருக்க எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான தகவல்தெரிவிப்போருக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட இருப்பதாக எஸ்ஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில்
தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள ராக்போர்ட் நகரில் அமைந்துள்ள எஸ்ஐடி அலுவலகத்தில் இதற்கான அறிவிப்பை எஸ்பி ஜெயகுமார் வெளியிட்டார்.
சரியான தகவல்தெரிவிப்போருக்கு 50 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று கூறி அதற்கான தொலைபேசி எண்களையும் அவர் வெளியிட்டார்.
அதன்படி எஸ்.பி.ஜெயக்குமார் - 9080616241 என்ற எண்ணிலும், டிஎஸ்பி மதன் - 9498120467, 7094012599 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சிபிஎம் கட்சி பிரமுகர் கொலை வழக்கு- 5 பேருக்கு ஆயுள் தண்டனை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G