காசி விசுவநாதர் கோவில் வழக்கில் முக்கிய வழிகாட்டுதலை வழங்கிய நீதிமன்றம்

காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரும் வழக்கில் முக்கிய வழிகாட்டுதலை வழங்கியது நீதிமன்றம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 16, 2022, 08:33 PM IST
  • ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் முக்கிய அறிவுறுத்தல்
  • நீதிமன்றம் வழிகாட்டுதல் வெளியிட்டது
  • காசி கோவிலுக்கு கமிஷனர் சென்று விசாரணை மேற்கொள்வார்
காசி விசுவநாதர் கோவில் வழக்கில் முக்கிய வழிகாட்டுதலை வழங்கிய நீதிமன்றம் title=

வாரணாசி: காசி விஸ்வநாத் - ஞானவாபி மசூதி வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. 

காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 2020ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலில் விசாரணையின் போது கமிஷனரை நியமிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 

விசாரணையின் போது, ​​நியமிக்கப்பட்ட கமிஷனர் ஏப்ரல் 19 ஆம் தேதி காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் வளாகத்திற்கு வருவார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

விசாரணையின் போது வீடியோவும் எடுக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. விசாரணையின் போது, ​​கமிஷனர் வருகையின் போது, ​​அசம்பாவிதம் ஏதும் நிகழாத வகையில், பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்துவந்தது. இந்துக்களின் முக்கியமான கோவிலும், இஸ்லாமியரின் மசூதியும் அமைந்திருக்கும் வளாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டுள்ளது. 

world

வளாகத்தை ஆய்வு செய்யவும், ரேடார் ஆய்வு செய்யவும், வீடியோ பதிவு செய்யவும் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வளாகத்தை மீண்டும் இந்து தெய்வங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.

முன்னதாக, 351 ஆண்டுகள் கால உண்மைகளை விவரிக்கும் சில வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான பல ஆவணங்களை இந்து தரப்பினர் சமர்ப்பித்தனர்.

மேலும் படிக்க | அயோத்தியில் கட்டப்படும் புதிய மசூதி எப்படி இருக்கும்?

அதில், 1669 செப்டம்பர் 2 ஆம் தேதி, காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது என்றும் அவுரங்கசீப்பின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது என்பதற்கான வரலாற்று ஆவணமும் அடங்கும். 

இந்த சர்ச்சைக்குரிய வளாகத்தில் இந்துக்களின் புனிதமானசுயம்பு ஜோதிர்லிங்கம் இருப்பதாக இந்து தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அதை முஸ்லிம்கள் மறுக்கின்றனர்.

1664 ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் கோவிலை ஔரங்கசீப் அழித்ததாகவும், அதன் பிறகுதான், மசூதி அங்கு கட்டப்பட்டதாகவும் ஞான்வாபி மசூதி பற்றி கூறப்படுகிறது. 

காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஞானவபி மசூதி வளாகம் குறித்த அகழ்வாராய்ச்சியை நடத்துவதற்காக வாரணாசி நீதிமன்றம்இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு (ASI) அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Trending News