சென்னை: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோய் (Covid-19) தடுப்பு நடவடிக்கை காரணமாக டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கூடங்கள், கிளப்புகள் மற்றும் அனைத்து விளையாட்டு அரங்கங்கள் மார்ச் 31 வரை தமிழகத்தில் (Tamil Nadu) மூடப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த திங்களன்று அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்வி நிலையங்கள் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்தார்.
இதில் சோகம் என்னவென்றால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கூடங்கள், கிளப்புகள் மூடப்பட்டு உள்ளதால், அதன் வருவாய் குறைந்து விட்டதாக அதிகாரிகள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் மதுபான கடையின் விற்பனை 19 சதவீதமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் விற்பனை சரிவை கண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தை பொருத்த வரை கொரோனோ வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் சிலர் கொரோனோ வைரஸ் குறித்து வாட்ஸ் ஆப் மூலம் பல வதந்திகளை பரப்பிய வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு தமிழக போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை இதுவரை 200 ஐ தாண்டி உள்ளது. அவர்களில் 32 பேர் வெளிநாட்டினர். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 22 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 20 பேர் குணமடைந்துள்ளனர். ஐந்து பேர் இறந்துள்ளனர். இப்போது கொரோனாவின் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. இதுவரை 50 -க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது,