1 நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்!

5000 பள்ளி மாணவ மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்  

Written by - Yuvashree | Last Updated : Jan 29, 2024, 01:11 PM IST
  • சிறுதானிய நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி.
  • பள்ளி மாணவ மாணவிகள் செய்த புதிய சாதனை.
  • ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வைரல்.
1 நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்! title=

இந்திய வரைபடத்தின் வடிவில் 5000 மாணவ மாணவிகள் நின்று உலக சாதனை படைத்த ட்ரோன் காட்சிகள் காண்போரை கவர்ந்தது. உலக சாதனை நிகழ்வு இடத்திலே பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிய ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் வழங்கியது.

BODHI CHARITABLE TRUST & KURUKSHETRA IAS ACADEMY - இணைந்து உலக சிறுதானிய தினத்தை முன்னிட்டு அறம் விதைப்போம் என்ற தலைப்பில் உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்து சுமார் 5000 மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியம் விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசிய புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்

இந்த நிகழ்ச்சியயை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

நிகழ்ச்சியில்  தமிழ்நாடு சட்ட ஆணையரின் உறுப்பினர் தீனதயாளன்
ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாசுகி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசு எம்பி : - சிறுதானிய  உணவு பழக்கங்களால் இறப்பு வயது சராசரியாக 70 வயதாக இருக்கிறது. வயிற்றுக்கு மட்டுமின்றி பாரம்பரிய கலைகளும் நம் மனத்திற்கும் உடலுக்கும் வலிமை சேர்க்கிறது. இது போன்ற நிகழ்வுகள் மூலம் குழந்தைகள் சிறுவயது முதலே திடகாத்திரமான உணவுகள் மற்றும் பாரம்பரிய கலைகளை பின்பற்றுவதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது. அப்துல் கலாம் நிறைய மரங்களை நட்டு இந்தியாவை பசுமையாக்க முயற்சிகளை எடுத்து நிறைய மரங்களை நட்டும் வைத்தார். இது போன்ற நிகழ்வுகள் கலாம் அவர்களின் கனவை நினைவுக்கும் என்பதில் ஐயமில்லை.

 தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குருசேஸ்திர ஐஏஎஸ் அகாடமி நிறுவனத்தின் இயக்குனர் வாசுகி வினோதினி

சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் நாட்டின் பசி இல்லா உலகத்தையும், வறுமை இல்லா உலகத்தை கொண்டு வர வேண்டும் என்றால் கல்வியால் மட்டும் தான் சாதிக்க முடியும் அதற்காகத்தான் அறம் விதைப்போம் என்ற தலைப்பில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது

25க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறு தானியங்களை ஒரு நிமிடத்தில் விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்

மேலும் படிக்க | கொள்ளையடித்ததை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு பயணம் - எடப்பாடி பழனிசாமி

சிறுதானியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வரும் சங்கதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இப்படிப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்விடத்தில் ஆசியா புத்தகத்தில் இடம் பெற்று நிகழ்விடத்தில் அதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். வருங்காலத்தில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் தங்கள் போதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் என்று தெரிவித்தார்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு எம்பி, சிறுதானியங்கள் குறித்து இப்போதுள்ள மாணவ மாணவிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறினார். 

இதற்காக தமிழக அரசு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். உணவு பழக்க வழக்கங்கள் மாறியதன் காரணமாக ஹோட்டல் உரிமையாளர்களுக்கும், மருத்துவமனை சார்ந்த உரிமையாளர்களுக்கும், நல்ல வசதியாக இருந்து வருகிறது 

ஏனென்றால் Fast Food-உணவுகள் அதிகமாக சாப்பிடுவதன் காரணமாக ஒன்று ஹோட்டல் உரிமையாளர்களுக்கு லாபம் ஏற்படுகிறது, மற்றொன்று மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் உரிமையாளர்களுக்கு லாபம் ஏற்படுகிறது. தமிழகத்தில் இரண்டு தொழிலுமே நல்ல லாபத்தை ஈட்டி வருகிறது எனவே இது போன்ற உணவு வகைகளை தவிர்த்து சிறுதானியங்களை சாப்பிட்டால் பல நூறு ஆண்டுகளுக்கு உயிர் வாழலாம் என்று திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஆளுநரை வரவேற்க வராத கல்லூரி மாணவர்கள்,தேர்வு எழுத முடியாது - ஆடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News