எஸ்டிபிஐ அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை; சீமான் கடும் கண்டனம்

எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரிச் சோதனை, பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 14, 2022, 02:26 PM IST
  • எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை
  • கோவையில் நடத்தப்பட்ட சோதனையால் பதற்றம்
  • பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் கண்டனம்
எஸ்டிபிஐ அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை; சீமான் கடும் கண்டனம் title=

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பாஜக அரசின் எதேச்சதிக்காரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தன்னாட்சி அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மாற்றி சனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தி, அழித்தொழிக்கும் முயற்சியில் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருவது நாட்டினை பேரழிவினை நோக்கி இட்டுச்செல்லவே வழிவகுக்கும்.

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு - மோசடியாளரான நகைக்கடை மேலாளர்

இதுபோன்ற அதிகார அத்துமீறல்களைத் தொடர்வதை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நிறுத்திக்கொள்வதோடு, அதலபாதாளத்திற்குப் போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும், அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாடத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இல்லையேல், இலங்கையில் மக்கள் புரட்சியினால், அந்நாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசாங்கமும் எதிர்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என எச்சரிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

கோவை, கோட்டைமேட்டில்  எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று இரவு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். கட்சி நிதி வசூல் உள்ளிட்ட கணக்கு ஆவணங்களை வருமான ஆய்வு செய்த அதிகாரிகள், அங்குள்ள ஒரு கம்ப்யூட்டரில் பதிவாகியுள்ள தகவலையும் ஆய்வு செய்தனர். வெளிநாடுகளில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்று விவரங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் அங்கு பெருமளவு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க என்ன தயக்கம்?... சீமான் கேள்வி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News