மகா சிவராத்திரி விழாவில் இடம்பெறும் கிராமிய பாடல்கள்

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் தமிழ் கிராமிய பாடல்கள் இடம்பெற உள்ளன. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:30 PM IST
மகா சிவராத்திரி விழாவில் இடம்பெறும் கிராமிய பாடல்கள் title=

மகா சிவராத்திரியையொட்டி சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகள் சென்னை ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மார்ச் 1 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மங்கள இசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த இந்திய சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. 

மேலும் படிக்க |  10 -12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ்

நள்ளிரவில் மங்கையர்கரசி சொற்பொழிவாற்ற உள்ளார். சூப்பர் சிங்கர் சத்ய பிரகாஷ் குழுவினர் பக்தி பாடல்களை பாட உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து காலை 4 மணி முதல் 6 மணி வரை சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் - ராஜலட்சுமி குழவினரின் கிராமிய பக்தி இசைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு சார்பில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியில் 40 ஆயிரம் பேர் பங்குபெறுவார்கள் எனத் தெரிவித்தார். சிவராத்திரியில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்றும், வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்கான இட வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சிவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மேலும் படிக்க | நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு முடிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News