புதுடெல்லி: தீபாவளி பண்டிகை இந்தியாவில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகையாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த திருநாள் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகின்றது.
இவ்வாண்டு தீபாவளி (Diwali) பண்டிகை நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் தீபாவளியை கொண்டாடும் முறை முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.
அத்தகைய ஒரு நாடு நேபாளம். அது இந்தியாவின் அண்டை நாடாகவும் உள்ளது. நேபாளத்தில் இந்துக்கள் அதிகம் உள்ளதால் இங்கு தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வழக்கம் உள்ளது. தெய்வங்களைத் தவிர, நேபாளத்தில் தீபாவளியன்று விலங்குகளின் வழிபாடும் நடக்கிறது.
தீபாவளியன்று மக்கள் குறிப்பாக நாய்களை வணங்குகிறார்கள். இந்நாளில் நாய்களுக்கு மாலை அணிவித்தும், அலங்காரம் செய்தும் வழிபடுகின்றனர். இது தவிர, அவற்றுக்கு பிடித்த உணவுகளும் சாப்பிட பரிமாறப்படுகின்றன.
இதில் உள்ள ஐதீகம் என்ன?
இலங்கையை வென்ற பிறகு, ராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்திக்குத் திரும்பினார். அவர் திரும்பியதை நினைவு கூறும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவை ஒட்டிய நேபாளத்திலும் ராமர் அயோத்திக்கு திரும்பிய விழா கொண்டாடப்பட்டது.
ALSO READ: ரயிலில் சைக்கோவாக மாறிய ஜோக்கர்! பதறிய பயணிகள்!
நேபாளத்தில் (Nepal) தீபாவளி திகார் என்று அழைக்கப்படுகிறது, இந்த நாள் குகுர் திகார் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. குக்கர் அதாவது நாய்களை வணங்கும் வழக்கம் இப்படித்தான் தொடங்கியது.
திகார் நாளில், நேபாளத்தில் தீபோத்சவ் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியாவைப் போலவே, நேபாளத்திலும் வீடுகள் அகல் விளக்குகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. இங்கு தீபாவளி பண்டிகை 4-5 நாட்களுக்கு கொண்டாடப்படுகின்றது.
இரண்டாவது நாளில் குகுர் திகார் விழா கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் நாய்களுக்கு மாலை அணிவித்து வண்ணங்கள் பூசி மரியாதை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, நாய்களுக்கு பிடித்தமான பால், பழங்கள், ரொட்டி, முட்டை போன்றவற்றை உணவாக அளித்து விருந்து அளிக்கப்படுகிறது.
நாய்கள் ஏன் வணங்கப்படுகின்றன?
நாய்கள் (Dogs) யமராஜனின் தூதுவர்களாகக் கருதப்படுகின்றன. மேலும் மகாபாரத காலத்திலும், நாய் யுதிஷ்டிரனுடன் சொர்க்கத்திற்குப் பயணம் செய்தது. நேபாளத்தில், நாய்கள் மனிதர்களை தங்கள் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் பாதுகாக்கும் என்றும், இறந்த பிறகும், அவை தங்கள் எஜமானரை கவனித்துக்கொள்ளும் என்றும் நம்பப்படுகிறது.
குகூர் திஹார் தினத்தில் அவை கவுரவிக்கப்படுவதற்கு இதுவே காரணம். இங்கு மக்கள் தீபாவளியை முன்னிட்டு நாய்கள், மாடுகள், காளைகள் மட்டுமின்றி, காகங்களையும் வழிபடுகின்றனர்.
ALSO READ: 'கல்லறையில்' இருந்து வெளியே வந்த 'விரல்கள்'; நடந்தது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR