9,10,11-ம் வகுப்புகளுக்கு இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள்!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

Last Updated : May 7, 2019, 11:17 AM IST
9,10,11-ம் வகுப்புகளுக்கு இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள்! title=

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

பழனி முருகன் கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சாமி தரிசனம் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி, பேக் என 14 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. 

உயர்கல்வியில் இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதம் தான். ஆனால் தமிழகத்தில் 48.9 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும். மேலும் 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படவுள்ளது.

வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலவழிக்கல்வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News