சீனாவில் உயிருக்கு போராடும் தமிழக மாணவர்... முதலமைச்சரிடம் உதவிகேட்டு குடும்பத்தினர் கதறல்!

Pudukottai Student in China : தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், சீனா நாட்டில் வசிந்த வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் 2 நாள்களாக அவர் குறித்த தகவல் வெளியாகவில்லை. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 2, 2023, 07:09 AM IST
  • முதல்வரிடம் குடும்பத்தினர் கோரிக்கை.
  • 5 ஆண்டுகள் சீனாவில் இருந்ததாக தகவல்
  • சமீபத்தில், இந்தியாவில் இருந்து சீனா சென்ற அந்த மாணவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
சீனாவில் உயிருக்கு போராடும் தமிழக மாணவர்... முதலமைச்சரிடம் உதவிகேட்டு குடும்பத்தினர் கதறல்! title=

Pudukottai Student in China : புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகர் 12ஆவது வீதியில் வசித்து வரும் சையது அபுல் ஹசன். இவரின் மகன் ஷேக் அப்துல்லா (22), சீனாவில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் பயின்று வந்தார். அவரின் மருத்துவப்படிப்பு நிறைவு பெறும் தருவாயில் இருந்த சூழலில், அங்கு மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில், மருத்துவப் பயிற்சியும் பெற்று வந்தார். சமீபத்தில், தமிழ்நாடு வந்த அவர், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி அன்று சீனா திரும்பினார். 

சீனாவில் கொரோனா உச்சத்தில் இருப்பதனால், வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் பயணிகளுக்கு எட்டு நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், அப்துல் ஷேக்கும் எட்டு நாள்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின், வடகிழக்கு சீனாவில் உள்ள ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹார் (Qiqihar) மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் உத்தரவு

சீனா சென்றவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் கல்லீரல் பாதிப்படைந்து, மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு வார காலமாக  சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவனின் பெயரில் 5 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் செய்யபட்டு இருக்கும் நிலையில் மருத்துவ செலவு என்ற பெயரில் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறபட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருந்துள்ளார். 

பின்னர், 20 லட்சம் ரூபாய் சிகிச்சைக்காக கேட்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக மாணவனின் உடல்நிலை குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்த பெற்றோர் மாணவனின் உடல்நிலை குறித்து அறிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர்,  சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர் தனி பிரிவு, இந்திய வெளியுறவுத் துறை  என அனைத்து இடங்களுக்கும் மனு அளித்தும் மாணவனின் உடல்நிலையை அறிந்துகொள்ள இயலாமல் இருந்தது. 

மருத்துவ மாணவர் ஷேக் கடைசியாக பேசிய வீடியோ ஒன்று குடும்பத்தார் தரப்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பிரச்னையை தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று இந்த மருத்துவ மாணவரை மீட்க உதவிடுமாறு மாணவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.  

இந்நிலையில் மருத்துவ மாணவர் ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | முதலமைச்சர் அறிவிப்பு - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News