தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக கோவையில் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு என மின் மயானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.
தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக..
மனிதர்கள் இறந்தால் அவர்களை புதைக்க சுடுகாடு, தகனம் செய்யும் இடம், மின் மயானம் என பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றை தவிர வேறு எங்கு உடல்களை அனுமதியின்றி புதைத்தாலும் அது சட்டப்படி குற்றம் என கூறப்படுகிறது. ஆனால், விலங்குகளுக்கு அப்படிப்பட்ட விதிவிலக்கு எதுவும் இல்லை. நம் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகள் இறந்தால், அவற்றை தோட்டத்திலோ அல்லது மனிதர்கை புதைக்கும் மயானத்திலோதான் புதைப்போம். தற்போது, தென்னிந்தியாவிலே முதன்முறையாக கோவையில் இறந்து போன வீட்டு செல்லப்பிராணிகளின் உடல்களை தகனம் செய்ய தனி மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் ஆயுட்காலத்தில் கடைசி நொடி மனித உடலும், உயிரும் பிரிவதுதான்,முன்னோர்காலத்தில் உயிர் பிரிந்த பின் உடலை சுடுகாடு என சொல்லப்படும் மயானதிர்க்கு எடுத்து செல்லப்பட்டு ஆழமாக குழி தோண்டப்பட்டு புதைப்பார்கள்,அல்லது எரித்து விடுவார்கள், இன்னும் பல கிராமம் மற்றும் நகரங்களில் இந்த தகனம் முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | Priyanka Chopra: குழந்தை போல இரட்டை குதிரைவால் போட்டு போஸ் கொடுக்கும் பிரியங்கா..!
தற்போது இதற்கு மாற்றாக உடலை 10 நிமிடத்தில் எரித்து சாம்பல் ஆக்குவதற்கு எரியூட்டும் மின் மயானம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இங்கு மனித உடல்களை மட்டும் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் எரிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் மின் தகனம் செய்யும இடம்..
மனித உடலை போல் வீட்டு செல்லபிராணிகளான பூனைகள், நாய்கள் உள்ளிட்ட இறந்து போன விலங்கினங்களின் உடல்களை தகனம் செய்ய தன்னார்வ அமைப்பினர் இணைந்து கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் மின் மயானத்தை நிறுவியுள்ளனர்.இதனை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டார் துவக்கி வைத்தனர். தென்னிந்தியாவிலேயே செல்லப்பிராணிகளுக்கென தனி மின் மயானம் அமைக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர்.இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ‘எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..’ பிரபல நடிகருடனான காதலை உறுதி செய்த தமன்னா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ