மின்னணு துறை பிரிவில் தெற்கு ரயில்வேயின் திறனை பாராட்டி 3 விருதுகள்

மின்சார சேமிப்பில் சிறந்து விளங்கியதற்காக தெற்கு ரயில்வேவுக்கு 3 விருதுகளை கொடுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Dec 17, 2019, 01:15 PM IST
மின்னணு துறை பிரிவில் தெற்கு ரயில்வேயின் திறனை பாராட்டி 3 விருதுகள் title=

மின்சார சேமிப்பில் சிறந்து விளங்கியதற்காக தெற்கு ரயில்வேவுக்கு 3 விருதுகளை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் எரிபொருள் சேமிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை பல்வேறு பிரிவின் கீழ் எரிபொருள் சேமிப்பு அமைப்பு கணக்கிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் எரிசக்தி செயல்திறன் அமைப்பு விருதுகளை வழங்கி கெளரவிக்கிறது.

இந்த வகையில், கடந்த 2018-19 ஆண்டில், மின் ஆற்றலை சேமிப்பதில், தெற்கு ரயில்வேயின், மின்சாரப் பிரிவு, மின் ஆற்றலை சேமிப்பதில், சிறப்பாக செயல்பட்டதற்காக மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

மேலும் ரயில்வே பள்ளி பிரிவில், ஈரோடு ரெயில்வே பள்ளி தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருதுகளை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் ஆர்.கே.சிங் வழங்கினார். 

Trending News