SP பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: புதிய அறிக்கை

கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2020, 07:26 PM IST
SP பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: புதிய அறிக்கை title=

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய 74 வயதுடையவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்று (COVID-19) காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. "2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்" என்று அவர் கூறியிருந்தார்.

அதன் பிறகு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் (SP Balasubramaniam) உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து 6வது மாடியிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ALSO READ |  பிரபல பாடகர் SPB-யின் உடல்நிலை குறித்து மகன் வெளியிட்ட வீடியோ...!!

இதனையடுத்து, அவரின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இது தொடர்பாக அவரது மகனும் பின்னணி பாடகருமான மகன் SPB சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில், கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது எனவும், அவருக்கு தொடர்ந்து ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் (Hospital Statement) தனது புதிய அறிக்கையில் கூறியுள்ளது.

Trending News