நெருக்கடிக்கு உள்ளாகும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள்

தகுதி நீக்கம் செய்யப்பட எம்.எல்.ஏ.க்களின் தங்கிருந்த விடுதியின் அறைகளுக்கு சீல் வைத்த தமிழக அரசு. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2018, 09:27 AM IST
நெருக்கடிக்கு உள்ளாகும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் title=

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும்,  வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அப்போதைய தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் கடிதம் அளித்தனர். 

இதனால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி.தனபால். இதனையடுத்து சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வழங்கியது. அதில், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதியில் இருந்து வெளியேறுமாறும், உடனடியாக அவர்களின் அறைகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் சபாநாயகர் பி.தனபால் உத்தரவு பிறப்பித்தார். 

தமிழக சபாநாயகர் பி.தனபால் உத்தரவை அடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட எம்.எல்.ஏ.க்களின் தங்கிருந்த விடுதியின் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 

Trending News