தமிழகம், புதுவையில் SSLC பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது. இந்த இரு மாநிலங்களிலும் மொத்தம் 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். 

Last Updated : Mar 16, 2018, 09:54 AM IST
தமிழகம், புதுவையில் SSLC பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! title=

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது. இந்த இரு மாநிலங்களிலும் மொத்தம் 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். 

பொதுத்தேர்வுக்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கி வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேர். மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேர் எழுதுகிறார்கள். 

Trending News