தமிழகத்தின் இம்சை அரசன் ஸ்டாலின்; எந்த திட்டத்தையும் செயல்பட விடமாட்டார்: ஜெயக்குமார்

நீட் தமிழகத்திற்கு தேவையில்லாதது; நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தொடர்ந்து குரல் கொடுப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Updated: Nov 27, 2019, 02:32 PM IST
தமிழகத்தின் இம்சை அரசன் ஸ்டாலின்; எந்த திட்டத்தையும் செயல்பட விடமாட்டார்: ஜெயக்குமார்

நீட் தமிழகத்திற்கு தேவையில்லாதது; நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தொடர்ந்து குரல் கொடுப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

தமிழக அரசு செயல்படுத்தும் பெரும்பாலான திட்டங்களை எதிர்கட்சியான திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எந்த திட்டம் கொண்டு வந்தாலும் திமுக அதனை எதிர்த்து வந்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வை அமல்படுத்தியதற்கு திமுக பெரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தது. அந்த வகையில், ஜெயக்குமார் அமைச்சர் என்பதை மறந்து சூப்பர் முதல்வராக செயல்படுகிறார் என ஸ்டாலின் கூறினார். இவ்வாறு ஒருவரை ஒருவர் மாறிமாறி விமர்சிப்பது வாடிக்கையாக இருந்தது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில்; “நீட் தமிழகத்திற்கு தேவையில்லாதது, நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தொடர்ந்து குரல் கொடுப்போம்”. சமூக நீதியை குழிதோண்டி புதைத்தது திமுக தான். தமிழகத்தின் இம்சை அரசன் ஸ்டாலின், எந்த திட்டத்தையும் செயல்பட விடாமல் தடுக்கிறார், என்றார். முன்னதாக நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என அதிமுகவினர் கூறிவரும் நிலையில் தர்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாதது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.