சிலை கடத்தல் வழக்கு: சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு!

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. 

Vijaya Lakshmi விஜயலட்சுமி | Updated: Aug 1, 2018, 12:33 PM IST
சிலை கடத்தல் வழக்கு: சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு!

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. 

சிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி பல்வேறு சிலைகளை மீட்டுள்ளது.

சமீபகாலமாக பொன்.மாணிக்கவேலுக்கு அரசிடம் இருந்து தனக்கு அழுத்தம் வருவதாகவும், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசின் கொள்கை முடிவுகளை ஆகஸ்ட் 8-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.