கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 18, 2019, 01:24 PM IST
கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் title=

சென்னை: மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருகிறது. குறிப்பாக தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு திசையில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Trending News