69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Last Updated : Aug 1, 2018, 01:04 PM IST
69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்! title=

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவர்கள் முத்து ராமகிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் 'மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50% மேல் இருக்கக் கூடாது என கடந்த 1992-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.' எனவும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டில் 50% சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்த வழக்கை 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட பிரதான வழக்குடன் இணைக்கலாமே என நீதிமன்ற அமர்வு பரிந்துறை செய்தது. பின்னர் 69% இட ஒதுக்கீடு தொடரப்பாக இதுவரை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் நகல்களுடன் மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கினை ஆக.,1 (இன்று) ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் "மருத்துவ சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு குறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட இயலாது" என தெரிவித்து இந்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!

Trending News