ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

Supreme Court vs Isha: இரு பெண்களும் சுதந்திரமாக அங்கு வசிக்கின்றனர். ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான ஆட்கொணர்வு மனு வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 18, 2024, 05:34 PM IST
ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்  title=

Habeas Corpus Petition Against Isha Foundation: சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) முடித்து வைத்தது, அந்த அமைப்பின் ஆசிரமத்தில் வசிக்கும் இரு பெண்களும் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் அங்கு தங்கியுள்ளதாக அவர்கள் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்த பெண்ணின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா அறக்கட்டளையின் ஆசிரமத்தில் 39 மற்றும் 42 வயதுடைய இரு பெண்களும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டு "மூளைச் சலவை" செய்யப்பட்டதாக தந்தை மனுவில் கூறியிருந்தார். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, உச்ச நீதிமன்றத்தை அடைந்தது.

அந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், பெண்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு (ஆட்கொணர்வு மனு) விசாரணை நடத்தியது. 

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விசாரணையின் போது, ​​ஈஷா அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, அந்த இரு பெண்களும் 24 மற்றும் 27 வயதில் தாமாகவே முன்வந்து ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர் என்றும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த பெண்கள் 10 கிமீ மாரத்தான் போன்ற பொது நிகழ்வுகளில் கூட பங்கேற்றனர். மேலும் அவர்களின் பெற்றோருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் என்று ரோஹத்கி கூறினார்.

அதற்கு அடுத்டு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிமன்றம் இரு பெண்களுடனும் பேசி அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகக் கூறினார். இரண்டு பெண்களும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரமத்தில் வசிப்பதாக வாக்குமூலம் அளித்ததையடுத்து வழக்கை தள்ளுபடி செய்வதாக அவர் கூறினார்.

மறுபுறம் தமிழ்நாடு காவல்துறையும் ஈஷா அறக்கட்டளை குறித்து கவலைகளை எழுப்பியது. ஈஷா அறக்கட்டளையுடன் தொடர்புடைய காணாமல் போனோர் வழக்குகளை போலீசார் முன்னிலைப்படுத்தினர். இதுகுறித்து கோவை காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் கூறுகையில், ஆலாந்துறை காவல் நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளில் காணாமல் போன 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 வழக்குகள் மூடப்பட்டு, ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது, எனவே விசாரணை செய்ய தடை விதிக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதற்கு நீதிபதிகளும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, உச்சநீதிமன்றம் தனது இன்றைய தீர்ப்பு ஆட்கொணர்வு மனுவுக்கு மட்டுமே உரியது என்றும், தற்போது நடந்துகொண்டிருக்கும் காவல்துறை விசாரணையில் தலையிடாது என்றும், மாநில அரசு சுதந்திரமாக செயல்படலாம் என்றும் தெளிவுபடுத்தியது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News