இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடமளிக்க வேண்டும் -TTV

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களுக்கும் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Dec 10, 2019, 01:21 PM IST
இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடமளிக்க வேண்டும் -TTV
கோப்புப்படம்

சென்னை: பலத்த எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு (Citizenship Amendment Bil l2019) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சலுகை வழங்கபட வில்லை என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) குடியுரிமை சட்டதிருத்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களுக்கும் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதுக்குறித்து அவர் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியது, 

குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தை மதத்தின் அடிப்படையில் அணுகாமல், மனிதநேயத்தின் அடிப்படையில் மத்திய அரசு கையாளவேண்டும் என வலியுறுத்துகிறேன். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர் ஆகியோர் 6 ஆண்டுகள் இங்கே வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கலாம் என்று குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

ஆனால், பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இதில் விடுபட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டால் மட்டுமே இந்தியா மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் போற்றுகிற தேசம் என்பது உறுதியாகும். எனவே, மத்திய அரசு இப்பிரச்சினையைத் தாயுள்ளத்தோடு அணுகிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019: 

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து  மத பாகுபாட்டால் வெளியேறி வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016 ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.

அப்பொழுது CAB மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிராஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என தெரிவித்தார். மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில்..... குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. இந்த மசோதா, 0.001 சதவீதம் கூட இந்தியா சிறுபான்மையினருக்கு எதிரானது என குறிப்பிடும் வகையிலான எதுவும் இல்லை. இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவர். அதனால் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.