Sep 1 முதல் தமிழகத்தில் பொது நூலகங்கள் திறக்கப்படும்: அரசாங்க உத்தரவு!!

COVID-19 தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட லாக்டௌனால் சுமார் ஐந்து மாதங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் பொது நூலகங்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2020, 12:23 PM IST
  • நூலகங்களை திறப்பது தொடர்பாக மாநில அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது.
  • அனைத்து நூலகங்களும் செப்டம்பர் 1 முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நூலகங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.
Sep 1 முதல் தமிழகத்தில் பொது நூலகங்கள் திறக்கப்படும்: அரசாங்க உத்தரவு!! title=

சென்னை: COVID-19 தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட லாக்டௌனால் (Lockdown) சுமார் ஐந்து மாதங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் பொது நூலகங்கள் (Public Libraries) செப்டம்பர் 1 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். இது தொடர்பாக மாநில அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது.

 “பொதுமக்களின் நலனுக்காக நூலகங்களை மீண்டும் திறக்க பல்வேறு அமைப்புகள் கோரியுள்ளன. கோரிக்கைகளையும் சாத்தியக்கூறுகளையும் பரிசீலித்த பின்னர், பகுதி நேர நூலகங்களைத் தவிர அனைத்து நூலகங்களும் செப்டம்பர் 1 முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவிடுகிறது” என தலைமைச் செயலாளர் கே சண்முகம் அந்த உத்தரவில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் சுமார் 4,000 நூலகங்கள் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கும். கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் (Anna Centenary Library), மாவட்ட மத்திய நூலகங்கள் மற்றும் முழுநேர கிளை நூலகங்களில் லெண்டிங் பிரிவு, குறிப்பு பிரிவு மற்றும் சொந்த புத்தக வாசிப்பு பிரிவு மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று சண்முகம் கூறினார்.

ALSO READ: பொதுமுடக்கம் முடியவுள்ள சூழலில் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை! போக்குவரத்து தொடங்குமா?

கிளை மற்றும் கிராம நூலகங்களில் லெண்டிங்க் பிரிவு மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். கிளை நூலகங்கள் மற்றும் கிராம நூலகங்களைத் தவிர, பிற நூலகங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். கிளை நூலகங்கள் மற்றும் கிராம நூலகங்கள் அவற்றின் வழக்கமான வேலை நேரப்படி, அனைத்து வேலை நாட்களிலும், பிற்பகல் 2 மணிக்கு முன்வரை செயல்படும்.

இதற்கிடையில், மாநிலத்திற்கு வருகை தரும் அனைத்து வணிகப் பயணிகளும் 72 மணிநேரங்கள் மட்டுமே குறுகிய காலத்திற்கு தங்க விரும்பினால், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்க மாநில அரசு மற்றொரு உத்தரவை பிறப்பித்தது. வருவாய் செயலாளர் அதுல்யா மிஸ்ராவின் கூற்றுப்படி, இந்த அறிவிப்பு தொழில் மற்றும் பொருளாதார உணர்வுக்கு சாதகமான ஊக்கத்தை அளிக்கும்.

ALSO READ: செப்டம்பர் 28 முதல் கட்டம் கட்டமாக கோயம்பேடு சந்தை திறக்கப்படும்: OPS

Trending News