கிளாம்பாக்கம் மெட்ரோவுக்கு உடனே ஒப்புதல் அளியுங்கள் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 3, 2022, 12:42 PM IST
  • கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம்
  • கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்
கிளாம்பாக்கம் மெட்ரோவுக்கு உடனே ஒப்புதல் அளியுங்கள் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் title=

இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சென்னை விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 10 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இன்னும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் படிக்க | ரசிகர்கள் மீட் அப்பில் என் ஹெல்மெட்டை காணவில்லை - TTF வாசன் வெளியிட்டிருக்கும் வீடியோ

கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விட்டது. சென்னையையும், புதிய பேருந்து நிலையத்தையும் இணைக்க இப்போதுள்ள புறநகர் ரயில், நகரப் பேருந்து சேவைகள்  போதுமானவையல்ல. அதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் மற்றொரு ட்வீட்டில், “தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் தான் மத்திய அரசின் ஒப்புதலையும் பெற்று நிதியை பெற முடியும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; நடப்பாண்டிற்குள் பணிகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News