ரசிகர்கள் மீட் அப்பில் என் ஹெல்மெட்டை காணவில்லை - TTF வாசன் வெளியிட்டிருக்கும் வீடியோ

நேற்று நடந்த ரசிகர்கள் மீட் அப்பில் தனது ஹெல்மெட்டை காணவில்லை என யூட்யூபர் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 3, 2022, 11:24 AM IST
  • டிடிஎஃப் வாசன் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது
  • இதற்காக பல்லாயிரக்கணக்கானோர் அவரை சந்தித்தனர்
 ரசிகர்கள் மீட் அப்பில் என் ஹெல்மெட்டை காணவில்லை - TTF வாசன் வெளியிட்டிருக்கும் வீடியோ title=

2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலம் என கூறப்படுபவர் டிடிஎஃப் வாசன். யூட்யூபரான இவர் கோவையை சேர்ந்தவர். தனது பைக்கில் பல இடங்களுக்கு ரைட் செல்வதையும், அதை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவருக்கு 27 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர்.

ஏராளமான யூட்யூபர்கள் இருந்தாலும் இவருக்கு 2k கிட்ஸில் பல ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமா பிரபலத்துக்கு இணையாக இவரை காண கூட்டம் கூடுகிறது. அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வாசனுக்கு வாழ்த்து கூறி பல பரிசு பொருள்களை அளித்தனர்.

Vasan

இதனையடுத்து சமூக வலைதளங்களில் நேற்று முழுக்க டிடிஎஃப் வாசனின் வாசமே அடித்தது. மேலும், 2k கிட்ஸ் தேவையில்லாமல் வாசனுக்கு பிரபல்யத்தை கொடுக்கின்றனர்.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுவை மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் - மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

பக்குவம் என்பதே சுத்தமாக இல்லை. அவர்கள் மாய உலகத்தில் வாழ்கின்றனர் 90ஸ் கிட்ஸ் முறையிட ஆரம்பித்தனர். இதனைக் கண்ட 2k கிட்ஸ்ஸும், 90ஸ் கிட்ஸுக்கு வயதாகிவிட்டதால் அவர்களால் எங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள்தான் பழைய உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என பதிலடி கொடுத்தனர்.

மேலும் படிக்க | Education Loan: பெற்றோர்களின் கவனத்திற்கு; உங்கள் பிள்ளைகளுக்கு சிக்கல்

இந்நிலையில் நேற்று நடந்த ரசிகர்கள் மீட் அப்பில் தனது ஹெல்மெட் காணாமல் போய்விட்டதாக டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “கிஃப்ட்ஸ் மட்டுமில்லை. ஹெல்மெட்டும் போய்விட்டது. 

 

கண்டிப்பாக யாரும் திருடியிருக்கமாட்டார்கள்.எனது ஞாபகதார்த்தமாக அவர்கள் எடுத்து சென்றிருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவ்வளவு கூட்டத்தில் பத்திரமாக வைத்திருக்க வேண்டியது எனது பொறுப்பு.

அதனால் யாரையும் குறை சொல்லவில்லை. நான்தான் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்” என்றார். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | லாக்கப்பில் மரணம் என்றாலே காவல்துறை மீது பழிவந்துவிடுகிறது - டிஜிபி சைலேந்திரபாபு வேதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News