உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து என அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 7, 2019, 09:40 AM IST
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து என அறிவிப்பு title=

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதுமட்டுமில்லாமல் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் உள்ள ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் என இரண்டு கட்டமாக நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும். வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13. வேட்புமனுத்தாக்கலை திரும்ப பெறுதல் டிசம்பர் 18. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தது. 

இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதுமட்டுமில்லாமல் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Trending News