தஞ்சையில் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு சென்னை, தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளது. தஞ்சை மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் அவரது உள்ளது. அவரது இந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் அசம்பாவிதம் நிகழும் முன் அதை இடிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த வீட்டில் அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேரடியாக வீட்டுக்கே சென்ற மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை இடிக்காதது குறித்து மனோகரனிடம் விசாரித்துள்ளனர். நோட்டீஸ் குறித்த தகவலை சசிகலா குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளதாக கூறிய அவர், தான் அந்த வீட்டில் வசிக்கவில்லை என்றும் பின்பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அந்த வீட்டை விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய அதிகாரிகள் வீட்டின் முன் நோட்டீஸை ஒட்டியுள்ளனர்.