கேரளா - தமிழ்நாட்டை இணைக்கும் 9 புறவழிச்சாலைகளை மணல் குவித்து அடைத்த காவல்துறை...

கேரளா மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் ஒன்பது புறவழிச்சாலைகளின் அனைத்து நுழைவாயிலிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மணல் குன்று எழுப்பி தமிழக காவல்துறையினர் திருவணந்தபுரம் எல்லையை அடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Apr 28, 2020, 08:14 AM IST
கேரளா - தமிழ்நாட்டை இணைக்கும் 9 புறவழிச்சாலைகளை மணல் குவித்து அடைத்த காவல்துறை... title=

கேரளா மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் ஒன்பது புறவழிச்சாலைகளின் அனைத்து நுழைவாயிலிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மணல் குன்று எழுப்பி தமிழக காவல்துறையினர் திருவணந்தபுரம் எல்லையை அடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், நெய்யாட்டிகரை மற்றும் பரஸ்ஸலா முதல் எல்லை கிராமமான வெல்லாரடா வரையிலான பிரதான சாலைகள் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூடிய புறவழிச்சாலைகள் பாலுகல் காவல் நிலையத்தின் எல்லைக்குள் வருகின்றன எனவும், தமிழக எல்லையில் பாலுகல் காவல்துறையினர் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தகவ்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவுதல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லைக்குள் நுழைய வேண்டாம் என்று பலுகல் காவல்துறையினர், தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட உள்ளூர்வாசிகளை எச்சரித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக இந்த புறவழிச்சாலைகள் மூலம் பலர் கேரளாவுக்குள் நுழைவதை காவல்துறையினர் அறிந்துள்ளனர்., இந்நிலையில் இந்த எல்லை சாலையை காவல்துறையினர் மணல் கொண்டு அடைத்துள்ளது.

தமிழ்நாட்டில், அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்ட நேரம் மதியம் 1 மணிக்கு முடிவடையும் நிலையில், அண்டை மாநிலமான கேரள எல்லைக்குள் மக்கள் பிரவேசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் விதமாக சாலை வழி எல்லை போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத மதுபானங்களை கொண்டு செல்வதற்கு சமூக விரோத சக்திகள் இந்த சாலைகளைப் பயன்படுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே மக்கள் கேரள எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பாலுகல் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 

பாலுகல் காவல்துறையினர் அனைத்து புறவழிச்சாலைகளின் நுழைவு புள்ளிகளிலும் தடுப்புகளை வைத்திருந்தாலும், மக்கள் தடைகளை நீக்கி கேரளாவுக்குள் நுழைகிறார்கள். இதனால் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறையினர் தடுப்புகளுக்கு அருகே மணல் நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பனச்சமூடு சந்திப்பில் போதுமான காவல்துறை பணியாளர்கள் இருப்பதால் பயணிகளைத் திரையிடவும் சரிபார்க்கவும் நாங்கள் பிரதான சாலைகளைத் தடுக்கவில்லை. ஆனால் இங்கு ஒன்பது சிறிய சாலைகள் உள்ளன, மேலும் குடியிருப்பாளர்கள் இந்த சாலைகளைப் பயன்படுத்தி காவல் சோதனையைத் தவிர்க்கிறார்கள். நாங்கள் தடுப்புகளை அமைத்திருந்தாலும், பயணிகள் இரவில் எல்லையைத் தாண்டி பயணிக்க முயற்சிக்கின்றனர், எனவே மணல் நிரப்புவதன் மூலம் இந்த சாலைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்றோம்” என்று பாலுகல் SI சுந்தர் லிங்கம் கூறுகிறார். 

முன்னதாக, கேரளாவிலிருந்து தங்கள் மாநிலத்திற்கு மக்கள் நுழைவதைத் தடுக்க கர்நாடக அரசு ஒரு பிரதான சாலைக்கை சீல் வைத்தது. இருப்பினும், மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து இது பின்னர் திறக்கப்பட்டது.

Trending News