TN School Reopening: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவை எடுத்தது தமிழக அரசு

தமிழகத்தில் கோவிட் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிகைகளை அரசு துரிதமாக எடுத்து வருகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 17, 2021, 10:56 AM IST
TN School Reopening: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவை எடுத்தது தமிழக அரசு

Tamil Nadu School Reopening News: தமிழகத்தில் நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்படும் என தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். நேற்று திருச்சியில் பள்ளிகளின் செயல்பாடு மற்றும் இன்னும் பல முக்கிய விஷயங்களைப் பற்றி அவர் பேசினார்.

அப்போது அவர், “தமிழகம் முழுதும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்தியது போல், பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்த வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.கொரோனா காலகட்டத்தில் பணியின் போது ஆசிரியர்கள் உயிர் இழந்திருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது பற்றி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.மாணவ - மாணவியரை பள்ளிக்கு வரவழைப்பது தான் ஆசிரியர்களின் பணி. அவர்களிடம் பாகுபாடு காட்டி துன்புறுத்தக் கூடாது.

மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பதன் அவசியம் பற்றியும், அவர்களை வரவழைப்பது பற்றியும் தான் விவாதித்தோம். நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும்.” என்று கூறினார். 

முன்னதாக, தமிழகத்தில் தினசரி கோவிட் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நவம்பர் 1 முதல் அங்கன்வாடி, ப்ளே ஸ்கூல் மற்றும் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கன்வாடி, ப்ளேஸ்கூல்கள் மற்றும் மழலையர் பள்ளி ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை அடுத்த மாதம் முதல் பள்ளிகளுக்கு வர தமிழக அரசு (TN Government) அனுமதித்தது குறிப்பிடத்டக்கது.

இதற்கிடையில், பண்டிகை காலத்தை ஒட்டி மாநில அரசு கோவில்களில் (TN Temples) வார இறுதி வழிபாட்டிற்கான தடையை நீக்கியது. உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் உட்பட அனைத்து கடைகளையும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதித்தது. வார இறுதிகளில் கடற்கரைகளுக்கு செல்வதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து கல்வி மையங்கள் மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சிகள் நடத்தப்படலாம் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ALSO READ: Kendriya Vidyalaya பள்ளிகளில் ஆசிரிய நியமனம்: மத்திய அரசு பதில்- வெங்கடேசன் MP

செப்டம்பர் 29 ஆம் தேதி, தமிழக அரசு, அதிக தளர்வுகளுடன் அக்டோபர் 31 வரை ஊரடங்கை நீட்டித்தது. சென்ற வியாழக்கிழமை அரசாங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பண்டிகைகளை கூட்டம் கூட்டி பொது இடங்களில் நடத்துவதற்கான தடை தொடர்வதாக கூறப்பட்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சி இது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனுடன் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.

தமிழகத்தில் கோவிட் -19 நிலைமை

தமிழ்நாட்டில் (Tamil Nadu) நேற்று 1,233 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிகப்பட்டனர். இதனுடன் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,85,874 ஆகியுள்ளது. நேற்று 15 பேர் இறந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 35,884 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,434 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15,022 ஆக உள்ளது என ஒரு சுகாதார செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

ALSO READ: T23 புலிக்கு உடல்நலக் குறைவு; தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News