பண்டிகை காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியளித்த அரசு! இவற்றுக்கெல்லாம் இனி அனுமதி!

  கொரோனா பெருந்தொற்றினால் பலவகை தொழில்களும் முடங்கி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது.தொடுதல் மூலம் கொரோனா பரவும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தும், சிலவற்றை மூடியும் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 14, 2021, 04:34 PM IST
பண்டிகை காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியளித்த அரசு! இவற்றுக்கெல்லாம் இனி அனுமதி!  title=

சென்னை :  கொரோனா பெருந்தொற்றினால் பலவகை தொழில்களும் முடங்கி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது.தொடுதல் மூலம் கொரோனா பரவும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தும், சிலவற்றை மூடியும் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது.கொரோனாவின் தாக்கம் சற்று குறையத் தொடங்கிய நிலையில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்தது.  இருப்பினும்,குறிப்பாக பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள்,கடற்கரை, சுற்றுலாத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. பண்டிகை காலம் என்பதால் இவற்றை திறக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசு பதிலுரைத்தது.இந்நிலையில் கொரோனா சம்பந்தமான கட்டுப்பாடுகள் இந்த மாதம் 31-ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில் நேற்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

temple

இந்த நிலையில், தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வரவுள்ள நிலையில், கோயில்கள் திறப்புக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும், மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் வழக்கம்போல் முழுமையாக செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாது,அனைத்து வகைக் கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இருப்பினும் பொதுமக்கள் அதிகம் கூடும் தருணங்களான திருவிழாக்கள், அரசியல் திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடைகள் எவ்வித தளர்வுகளுமின்றி தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்! 3 நாட்களில் ரூ. 6.43 லட்சம் வசூல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News